Latestமலேசியா

ஊழல் விசாரணை: விடுமுறையில் அனுப்பப்பட்ட இராணுவத் தளபதி

கோலாலம்பூர், டிசம்பர்-28 – இராணுவத் தலைமைத் தளபதி, ஜெனரல் தான் ஸ்ரீ முஹமட் ஹஃபிசுடின் ஜந்தான் (Tan Sri Muhammad Hafizuddeain Jantan) உடனடி விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார்.

அவர் தொடர்பான விசாரணை சுதந்திரமாக நடைபெற வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, தற்காப்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ மொஹமட் காலிட் நோர்டின் தெரிவித்தார்.

விசாரணை முடியும் வரை அவர் விடுப்பில் இருப்பார் என காலிட் சொன்னார்.

அது என்ன விசாரணை என அமைச்சரின் அறிக்கை குறிப்பிடவில்லை.

என்றாலும், இராணுவக் கொள்முதல் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC மேற்கொண்டு வரும் தீவிர விசாரணையைத் தான் அவர் குறிப்பிடுகிறார் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

டிசம்பர் 23-ஆம் தேதி தொடங்கிய அவ்விசாரணை, Chegubard என அழைக்கப்படும் சமூக ஆர்வலர் அளித்த புகாரின் அடிப்படையில் ஆரம்பமானது.

ஒரு மூத்த இராணுவ அதிகாரி மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்களின் வங்கி கணக்குகளில் சந்தேகத்திற்கிடமான பணப் பரிமாற்றங்கள் நடந்ததாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

குறிப்பாக மாதந்தோறும் 50 முதல் 60 ஆயிரம் ரிங்கிட்டை வங்கிக் கணக்கில் அந்த அதிகாரி பெற்று வந்ததாகவும் Chegubard குற்றஞ்சாட்டினார்.

அப்பணம், இராணுவக் குத்தகைகளைப் பெற்ற நிறுவனங்களுடன் தொடர்புடையவை எனக் கூறப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!