Latestமலேசியா

எண்ணெய் விலை உயர்விலும் SUKMA 2026 தொடரும்; KBS அறிவிப்பு

கோலாலாம்பூர், ஏப்ரல்-9-SUKMA 2026 எனப்படும் மலேசிய விளையாட்டுப் போட்டி, ஆகஸ்ட் 15 முதல் 24 வரை திட்டமிட்டபடி சிலாங்கூரில் நடைபெறும்.

எண்ணெய் விலை உயர்வு மற்றும் பொருளாதார சவால்கள் இருந்தபோதிலும், சுக்மா தொடருமென, இளைஞர்-விளையாட்டுத் துறை அமைச்சர் Dr. Mohammed Taufiq Johari தெரிவித்துள்ளார்.

விளையாட்டாளர்களின் வளர்ச்சியை பாதிக்காமலிருக்க இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், சிலாங்கூர் மற்றும் இணை உபசரணை மாநிலங்கள் இப்போட்டி ஏற்பாட்டுக்காக ஏற்கனவே உயர் செலவுகளைச் சந்தித்துள்ளதால், கடைசி நேரத்தில் இரத்துச் செய்வது மேலும் பெரிய இழப்பை ஏற்படுத்தும் என Taufiq சுட்டிக் காட்டினார்.

என்றபோதிலும், இம்முறை சற்று சிறிய அளவிலும், சிக்கனமாகவும் போட்டி நடத்தப்படுகிறது.

அதற்காக, போட்டியின் தரமும், போட்டி எண்ணிக்கையும் குறையாது என்றார் அவர்.

இந்த 2026 சுக்மா, அடுத்தாண்டு மலேசியாவில் நடைபெறவிருக்கும் சீ விளையாட்டுப் போட்டியின் தயார் நிலைக்கான முன்னோட்டக் களமாகவும் இருக்குமென அமைச்சர் சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!