
கோலாலம்பூர், நவம்பர்-11 – சயாம் – பர்மா மரண தண்டவாள நிர்மாணிப்புக் கொடுமையில் இருந்து மீண்டவர்களில் , மிக மூத்தவரான நெகிரி செம்பிலான் Tampin Linggi தோட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம் கந்தசாமியின் மறைவுக்கு, மலேசிய மரண ரயில்வே ஆர்வலர் சங்கம் D-R-I-G ஆழந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.
அந்தக் கொடுந்துயரத்தில் இருந்து மீண்ட, ஆகக் கடைசி மலேசியர் இவர் என்று நம்பப்படுவதாக, D-R-I-G தலைவர் P.சந்திரசேகரன் தெரிவித்தார்.
97 வயது ஆறுமுகம் கந்தசாமி சனிக்கிழமை அதிகாலை காலமனார். அவரது உடல் நேற்று ஞாயிற்று கிழமை அடக்கம் செய்யப்பட்டது.