Latestமலேசியா

எனது ஊழல் RM3.6 பில்லியனா? இது ‘அதிகப்படியான சதி’ – ரஃபிசி கண்டனம்

எனது ஊழல் RM3.6 பில்லியனா? இது ‘அதிகப்படியான சதி’ – ரஃபிசி கண்டனம்

கோலாலாம்பூர், பிப்ரவரி-20,

RM3.6 பில்லியன் மதிப்பிலான திட்ட ஊழலுடன் தம்மை இணைத்து பேசும் குற்றச்சாட்டுகளை, பொருளாதார முன்னாள் அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

“முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக் சம்பந்தப்பட்ட ஊழல் வழக்கே RM2.3 பில்லியன் தான்; அதை விட அதிகமாக RM.3.6 பில்லியன் ஊழல் செய்திருப்பதாக என்னை சித்தரிக்க முயற்சிக்கிறார்கள்”

“இது ஓர் “அதிகப்படியான சதி முயற்சி” ஆகும்; எனது புகழை அழிக்கவே இந்த குற்றச்சாட்டுகள் பரப்பப்படுகின்றன. ஆனால், இதுவரை எந்த நம்பகமான ஆதாரமும் வெளியிடப்படவில்லை”  என்றார் அவர்.

இந்த விவகாரம் குறித்து விரிவாக “Yang Berhenti Menteri” (YBM) எனும் தனது போட்காஸ்டில் இன்றிரவு விளக்கமளிப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

மேலும், குற்றச்சாட்டுகளை பரப்பியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாகவும், அந்த பண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக MACC விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆனால், குற்றச்சாட்டுகள் தவறான முறையில் ஊழல் வழக்காக சித்தரிக்கப்பட்டுள்ளதாக ரஃபிசி கூறுகிறார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!