
பெட்டாலிங் ஜெயா, ஜூலை 22 – ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் ஜெய்ன் ரய்யானின் தாயார், இஸ்மானிரா அப்துல் மனாஃப், போலீசார் தன்னை பொய் வாக்குமூலம் கொடுக்க கட்டாயப்படுத்தியதாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளார்..
13 நாட்கள் மேற்கொண்ட விசாரணைக்கு தான் முழு ஒத்துழைப்பு அளித்ததாகவும், ஆனால் காவல்துறையினர் அதில் திருப்தியடையவில்லை என்றும் கூறியுள்ளார்.
வாக்குமூலத்தில் தான் கட்டுக்கதைகளை சொல்லியதாகவும் அவர்களின் பொய் கூற்றுகளுக்கு தன்னை இயங்க வைக்கும் விதத்தில் செயலாற்றினர் என்றும் போலீஸ் மீது கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மேலும் தன் மீது சுமத்தப்பட்ட புறக்கணிப்பு குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக தனது ஆறு வயது மகனை தான் ஒருபோதும் புறக்கணித்ததில்லை என்றும் கண்ணும் கருத்துமாய் பாதுகாத்தார் என்றும் நீதிமன்றத்தில் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.