
கோலாலம்பூர், ஜனவரி- 9 – உலகின் சக்தி வாய்ந்த கடப்பிதழ்கள் பட்டியலில் சிங்கப்பூர் தனது முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
CNN Travel அந்தக் காலாண்டுக்கான தர வரிசையை வெளியிட்டுள்ளது.
சிங்கப்பூர் கடப்பிதழை வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் உலகின் 195 நாடுகளுக்குச் சென்று வர முடியும்.
விசா இன்றி 193 நாடுகளுக்குச் சென்று வரக் கூடிய வசதியைக் கொண்டுள்ள ஜப்பானுக்கு அதில் இரண்டாமிடம்.
பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், பின்லாந்து, தென் கொரியா ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
இவ்வேளையில் 227 நாடுகளில் 183 நாடுகளுக்கு விசா இல்லாமால் சென்று வரக்கூ கூடிய மலேசியக் கடப்பிதழ் 12-வது இடத்தைத் தக்க வைத்துள்ளது.
2023-ல் 14-வது இடத்திலிருந்த மலேசியா கடந்தாண்டு 2 இடங்கள் முன்னேறி 12-வது இடத்தைப் பிடித்தது.
அப்பட்டியலில் தாலிபான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் கடைசி 106-ஆவது இடத்தில் உள்ளது; ஆப்கானிஸ்தான் கடப்பிதழைக் கொண்டு வெறும் 26 நாடுகளுக்கு மட்டுமே சென்று வர முடியும்.
105-வது இடத்தில் சிரியாவும், 104-வது இடத்தில் ஈராக்கும் உள்ளன.
பட்டிலியலில் முன்னணியில் மற்றும் பின் தங்கிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அனுபவிக்கும் பயண சுதந்திரங்களுக்கு இடையிலான இடைவெளி ஒருபோதும் இவ்வளவுப் பெரியதாக இருந்ததில்லை என CCN Travel கூறியது.