
கோலாலம்பூர், மார்ச் 9 – SPM தேர்வு முடிவு மார்ச் 31 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வெளிவரும்.
2025ஆம் ஆண்டு எஸ்.பி.எம் தேர்வு எழுதிய மாணவர்கள் அன்றைய தினம் காலை 10 மணிக்கு மேல் தங்களது பள்ளிகளில் முடிவுகளை பெற்றுக் கொள்ளலாம். அதே வேளையில் தேர்வு எழுதிய தனிப்பட்ட மாணவர்கள் தங்களது மாநில கல்வித் துறைகளிடமிருந்து முடிவுகளை பெறமுடியும்.
மாணவர்களும் மற்றும் தனிப்பட்ட முறையில் தேர்வு எழுதியவர்களும்
தங்கள் தேர்வு முடிவுகளை myresultspm.moe.gov.my வழியாக சரிபார்த்து, தங்கள் தேர்வு முடிவுகளை பெற்றுக் கொள்ளலாம் “அல்லது SPM (இடைவெளி) MyKad எண் (இடைவெளி) குறியீட்டு எண்ணை டைப் செய்து, மார்ச் 31 அன்று காலை 10 மணி முதல் இவ்வாண்டு ஏப்ரல் ஏப்ரல் 6 ஆம்தேதி மாலை 6 மணி வரை 15888 என்ற எண்ணுக்கு SMS மூலம் அனுப்பலாம் என கல்வி அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நாடு முழுவதிலும் 3,350 தேர்வு மையங்களில் மொத்தம் 413,299 பேர் எஸ்.பி.எம் தேர்வை எழுதினர்.



