
பெடோங், அக்டோபர்-31,
கெடா, பெடோங்கில் உள்ள ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் ஒரு வரலாற்று நிகழ்வை நடத்தத் தயாராகி வருகிறது!
உலகம் முழுவதிலிருந்தும் மருத்துவர்கள், ஆய்வாளர்கள், அறிஞர்கள் ஒன்று கூடும் “ஏய்ம்ஸ்ட் பன்னாட்டு சித்த மருத்துவ மாநாடு 2025” வரும் நவம்பர் 22 மற்றும் 23-ஆம் தேதிகளில் நடைபெறகிறது.

‘உலக நலனுக்கான தமிழ் மூதறிவை முன்னெட்டுத்து சித்த மருத்துவம்’ என்ற கருப்பொருளில் இம்மாநாடு நடைபெறும்.
ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழகத்தின் இந்திய பண்பாடு மற்றும் தமிழ் நாகரீக நடுவத்தின் ஏற்பாட்டிலான இதில், தமிழரின் பாரம்பரிய சித்த மருத்துவம் நவீன அறிவியலுடன் கை கோர்க்கிறது.
மூலிகைகளின் மணமும், புதிய கண்டுபிடிப்புகளின் உற்சாகமும் கலந்த ஒரு அரிய சந்திப்பாகவும் இது விளங்குமென, அந்நடுவத்தின் இயக்குநர் முனைவர் மு.ராசேந்திரன் தெரிவித்தார்.
இது நம் மூதாதையர் ஞானத்தை உலக நலனுக்காக வெளிப்படுத்தும் ஒரு மேடை என்பதால், திரளாக வந்து கலந்துகொள்ளுமாறு அவர் பொது மக்களைக் கேட்டுக் கொண்டார்.
தமிழின் பெருமையை உணர்ந்து, உலக நலனுக்காக — சித்த மருத்துவம் வழியாக ஒன்றுபடுவோம் என்றார் அவர்.
எனவே, நீங்கள் ஆய்வாளர், மாணவர் அல்லது இயற்கை மருத்துவத்தில் ஆர்வமுள்ளவர் என்றால், இந்த அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!



