Latestஇந்தியாஉலகம்

ஏர் இந்தியா விமானம் வேண்டுமென்றே விபத்துக்குள்ளானது; நிபுணர் கூறும் பகீர் விளக்கம்

புது டெல்லி, ஜூலை-13- குஜராத், அஹமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என, ஒரு முன்னணி விமானப் பாதுகாப்பு நிபுணர் பகீர் விளக்கத்தை அளித்துள்ளார்.

விமானியே அவ்விபத்தைத் தூண்டியுள்ளார் என்பதே, விபத்து குறித்த முதல் கட்ட விசாரணை அறிக்கை சொல்ல வரும் செய்தி என கேப்டன் மோகன் ரங்கநாதன் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எரிபொருள் விநியோகத்தை தடைசெய்யும் விசைகள் இயங்கிய அல்லது இயக்கப்பட்ட விதம் மற்றும் விமானிகளின் அறையான cockpit-டில் நிகழ்ந்த உரையாடல்களின் ஆடியோ போன்றவற்றை வைத்துப் பார்க்கும் போது, இது ஒரு தற்கொலையாகக் கூட இருக்கலாம் என்றார் அவர்.

இரு விமானிகளிடையே ஒரு குழப்பமான உரையாடல் நிகழ்ந்திருப்பதையும் கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது.

“விமானத்தின் இயந்திரங்களுக்கான எரிபொருள் விநியோகத்தை ஏன் நிறுத்தினாய்?” என ஒரு விமானி கேட்கிறார். “நான் நிறுத்தவில்லை” என மற்றொருவர் பதிலளிக்கிறார்.

ஆகவே அங்கு என்னமோ நடந்திருக்க வேண்டும்; விமானிகளில் ஒருவர் மனஉளைச்சலில் கூட இருந்திருக்கலாம்… அதனால் வேண்டுமென்றே அவர் விபத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என, கடந்த கால சம்பவங்களைச் சுட்டிக் காட்டி மோகன் ரங்கநாதன் கூறினார்.

விமானிகள் பெரும்பாலும் இயந்திரங்கள் போலவே நடத்தப்படுகிறர்கள்; அவர்களும் மனிதர்களே; அவர்களுக்கும் சுக துக்கங்கள் இருக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.விமானிகளின் நலன்கள் மீது விமான நிறுவனங்கள் அக்கறைச் செலுத்த வேண்டும்.

என்றாலும், இது வெறும் முதல் கட்ட அறிக்கை தான் என்பதால், இப்போதே ஒரு முடிவுக்கு வராமல் இறுதி விசாரணை அறிக்கை வரும் வரை காத்திருப்போம் என, NDTV தொலைக்காட்சியிடம் அவர் கூறினார்.

மொத்தமாக 270-க்கும் மேற்பட்டோரின் உயிரை பலிகொண்ட இந்த ஏர் இந்தியா விமான விபத்துக்கு, 2 இயந்திரங்களுக்குமான எரிபொருள் விநியோகம் தடைபட்டதே காரணம் என, 15 பக்கங்கள் கொண்ட முதல் கட்ட விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!