
கோலாலம்பூர், ஜன 12 – புக்கிட் டமன்சாராவில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் இன்று காலையில் ஏர் கண்டிஷன் கருவியின் Compressor வெடித்ததில் ஆடவர் ஒருவர் மரணம் அடைந்தார்.
அந்த சம்பவத்தில் காயம் அடைந்த 10 பேரில் 24 வயதுடைய குத்தகை நிறுவனத்தின் ஊழியர் இறந்தது இன்று உறுதிப்படுத்தப்பட்டது. கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது உள்நாட்டைச் சேர்ந்த ஏர்கண்டிஷன் குத்தகை நிறுவனத்தின் ஊழியர் மரணம் அடைந்ததாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ பாடில் மர்சுஸ் ( Fadil Marsus ) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
இதற்கு முன் அந்த சம்பவத்தில் 9 பேர் காயம் அடைந்தததாக அறிவிக்கப்பட்டது. இப்போது அந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளதாக Fadil சுட்டிக்காட்டினார்.



