
கோலாலம்பூர், அக் –
அரபு லீக், ஒ.ஐ.சி எனப்படும் அனைத்துலக இஸ்லாமிய மாநாட்டு நிறுவனம் அல்லது ஐ.நா பாதுகாப்பு மன்றம் கேட்டுக்கொண்டால் காஸாவிற்கு அமைதிகாக்கும் படையை அனுப்ப மலேசியா தயாராய் இருக்கிறது.
அனைத்துலக நிலையில் கூட்டாக முடிவு எடுக்கப்பட்டால் , காசாவில் அமைதியை உறுதி செய்யும் முயற்சிக்கான கடப்பாட்டை மலேசியா ஆதரிக்கும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
அனைத்துலக அமைப்புகள் கேட்டுக்கொண்டால் அமைதிப் படையில் இணைந்து பணியாற்ற மலேசியா தயாராக உள்ளது.
இது தொடர்பான கோரிக்கையை இதற்கு முன் மலேசியா மறுத்தது கிடையாது. அமைதி காக்கும் படை இருக்கும்வரை அதனை அனுப்புவதற்கு நாங்கள் தயாராய் இருக்கிறோம் என அன்வார் கூறினார்.
காசாவில் அமைதியை உறுதி செய்வதற்கு அமைதி காக்கும் படையே சிறந்த உத்தரவாதம் என்பதையும் தாம் ஒப்புக்கொள்வதாக பிரதமர் தெரிவித்தார்.
காஸா மறுநிர்மாணிப்பிற்காக முயற்சிகளில் ஒரு பகுதியாக, அங்கு முக்கியமான உள்கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்புவதில் மலேசியாவும் ஜப்பானும் கவனம் செலுத்தும் என்றும் அவர் அறிவித்தார்