மலேசியா
ஒரு பெண்ணுக்காக அடித்துக் கொண்டார்களா? பினாங்கு கேளிக்கை விடுதி சண்டை தொடர்பில் 7 பேர் கைது

ஜோர்ஜ்டவுன், ஏப்ரல்-18,
பினாங்கில் உள்ள ஒரு கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட சண்டை வன்முறையாக மாறிய சம்பவத்தில், 7 பேரை போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.
இச்சம்பவம் ஏப்ரல் 10-ஆம் தேதி, ஜெலுத்தோங்கில் உள்ள கர்பால் சிங் சாலையில் நடந்தது.
சிலருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு, நாற்காலிகள் பறக்கும் அளவுக்கு பெரிதாகி சண்டையாக மாறியது.
சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி கவனத்தை ஈர்த்தது.
இதையடுத்து, 20 முதல் 40 வயதுக்குட்பட்ட 7 பேர் கைதுச் செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட தொடக்கக் கட்ட விசாரணையில், ஒரு பெண்ணுக்காக அவர்கள் அடித்துக் கொண்டது தெரிய வந்தது.
இந்தச் சம்பவத்தில் பெரும் காயங்கள் எதுவும் பதிவாகவில்லை.
என்றாலும், கலவரத்தில் ஈடுபட்டதன் பேரில் சந்தேக நபர்கள் விசாரிக்கப்படுகின்றனர்.



