மலேசியா

தம்பினைச் சேர்ந்த Batik Air நிர்வாக இயக்குனர் டத்தோ சந்திரன், துங்கு பெசார் தம்பின் பெருமிதம்

தம்பின், ஏப்ரல்-18,

நெகிரி செம்பிலான், தம்பின் மண்ணின் மைந்தனும் Batik Air விமான நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியுமான டத்தோ சந்திரன் ராமமூர்த்தி, நேற்று துங்கு பெசார் தம்பினை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

Tunku Syed Razman bin Tunku Syed Idrus Al-Qadri, நெகிரி செம்பிலான் மரபு படி, தம்பின் சடங்கு நிர்வாகத் தலைவராவார்.

சுருக்கமாகச் சொன்னால், அவர் அம்மாநிலத்தின் முக்கிய உள்ளூர் ஆட்சியாளர்களில் ஒருவராவார்.

​இந்நிலையில், அனைத்துலக விமானப் போக்குவரத்துத் துறையில் முத்திரை பதித்து வரும் டத்தோ சந்திரன் நேற்று துங்கு பெசார் தம்பினைச் சந்தித்தது முக்கியத்துவம் பெறுகிறது

​அதன் போது, தம்பினைச் சேர்ந்தவர்கள் உலக அளவில் சாதனை படைப்பது பெருமைக்குரியது என துங்கு பெசார் பாராட்டினார்.

சந்திரனின் வெற்றிப் பயணம் தம்பின் இளைஞர்களுக்கு ஒரு சிறந்த ஊக்கமாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அச்சந்திப்பின் ஒரு பகுதியாக, வரலாற்றுச் சிறப்புமிக்க தனது அதிகாரப்பூர்வ இல்லத்தை, டத்தோ சந்திரனுக்கு துங்கு பெசார் Razman தானே சுற்றி காண்பித்ததும் குறிப்பிடத்தக்கது.

இவ்வேளையில், ​தனது சிறுவயது நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட 46 வயது டத்தோ சந்திரன், தம்பினில் தான் கற்ற பாடங்களே சவால்களை எதிர்கொள்ளும் மனவலிமையைத் தமக்கு வழங்கியதாகக் கூறினார்.

இந்த நிகழ்வில் பல்வேறு முக்கியப் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!