Latestமலேசியா

ஒற்றுமையுடன் ஒளிர்ந்த KPKT இன் தீபாவளி கொண்டாட்டம்

புத்ராஜாயா, அக்டோபர் 14 –

வீடமைப்பு மற்றும் ஊராட்சி அமைச்சு (KPKT) இன்று புத்ராஜாயாவில் மகிழ்ச்சி, ஒற்றுமை மற்றும் கலாச்சார பன்மை நிரம்பிய சூழலில் தீபாவளியை மிக உற்சாகமாகக் கொண்டாடியது.

அமைச்சர் ஞா கார் மிங் (Nga Kor Ming) தலைமையில் நடைப்பெற்ற இக்கொண்டாட்டம், மலேசிய சமூகத்தின் அடையாளமான ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தைப் பிரதிபலிக்கும் நிகழ்வாக அமைந்திருந்தது. இது, அமைச்சின் ஊழியர்களிடையே உறவை வலுப்படுத்தி, குடும்ப உணர்வை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் தீபாவளி என்பது வெளிச்சத்தின் பண்டிகை மட்டுமல்லாது, ஒற்றுமை, புரிதல் மற்றும் மரியாதையை பிரதிபலிக்கும் நன்நாள் என்று வர்ணித்தார்.
அதே சமயத்தில் ‘Hari Cuci Malaysia’ (HCM) திட்டத்தின் வெற்றியைப் பகிர்ந்து கொண்டதோடு, அதன் மூலம் மலேசிய சாதனை புத்தகத்தில் இரண்டு புதிய சாதனைகள் படைக்கப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த சாதனைகள் மலேசியர்களின் ஒற்றுமையும் சுற்றுச்சூழல் பொறுப்புணர்வையும் பிரதிபலிக்கின்றன என்று அவர் வலியுறுத்தினார்.
அண்மையில் நடத்தப்பட்ட ‘Hari Cuci Malaysia’ , சுத்த சூழலை ஊக்குவிக்கும் முயற்சியில், 100,817 பேர் ஒரே நேரத்தில் நாட்டின் பல இடங்களில் துப்புரவு நடவடிக்கையில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், ஒரே நாளில் 27,679 கிலோ மறுசுழற்சி சமையல் எண்ணெய் சேகரிக்கப்பட்டதுடன் மொத்தம் 6,462 மெட்ரிக் டன் திடக் கழிவுகளும் அகற்றப்பட்டன.

.

இதனிடையே, இந்நிகழ்வில் துணை அமைச்சர் டத்தோ ஹாஜா ஐமான் அதிரா சாபு (YB Datuk Hajah Aiman Athirah binti Sabu), வீடமைப்பு மற்றும் ஊராட்சி அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ வீரா எம். நூர் அஸ்மான் தாயிப் (YBhg. Datuk Wira M. Noor Azman bin Taib), Malaysia Book of Records பிரதிநிதிகள் மற்றும் ஊழியர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!