
கங்கார், மே 7- கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜாலான் செருலிங் கங்காரில், தானியங்கி பார்க்கிங் தடுப்புகளைச் சேதப்படுத்திய முதியவர், கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
62 வயதான கூ கூன் வா, வேண்டுமென்றே லாரியைச் செலுத்தி பார்க்கிங் தடுப்புகளை மோதும் காட்சி கேமராவில் சிக்கியுள்ளது. இந்நிலையில் குற்றஞ்சாட்டப்பட்ட அவர், நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை.
இந்நிலையில் கூ கூன் வாவின் வழக்கறிஞரின் கோரிக்கைகளுக்கிணங்க, குறைந்தபட்ச ஜாமினாக 7,000 மலேசிய ரிங்கிட்டைச் செலுத்த வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
இவ்வழக்கு வருகின்ற ஜூன் 12ஆம் தேதி தொடருமென்றும், குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் வழங்கப்படலாம்.