டுங்குன், ஜனவரி-16, திரங்கானு, டுங்குன் கடலோரங்களில் சிப்பிகளைச் சேகரிப்பதை நிறுத்துமாறு பொது மக்களை போலீஸ் அறிவுறுத்தியுள்ளது.
தற்போது அங்கு பலத்த காற்று வீசுவதுடன், கடலில் பெரிய அலைகள் எழுவதால், அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு அவ்வெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டுங்குன் மாவட்ட கடலோரங்களில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்துக்கு காற்று வீசுவதோடு, 4.4 மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழும்புகின்றன.
இது பொது மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்பதால், சிப்பி சேகரிப்பை உடனடியாக நிறுத்துமாறு டுங்குன் போலீஸ் தலைவர் Maizura Abdul Kadir உத்தரவிட்டார்.
உத்தரவை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென்றார் அவர்.
நேற்று முன்தினம் தொடங்கி Pantai Sura கடற்கரையில் கரைத்தட்டிய சிப்பிகளைச் சேகரிக்க, ஏராளமான பொது மக்கள் அங்கு குவிந்த புகைப்படங்கள் முன்னதாக வைரலாகின.