
கோலாலம்பூர், ஆக 14 – சாலையில் என்ன நடந்தாலும் சரி , அதை பொருட்படுத்தாமல் வேடிக்கை பார்க்கும் கூட்டம் அல்லது சாலை பயனர்களை தினசரி பார்க்கலாம்.
ஆனால் சாலையில் ஏற்பட்ட பெரிய குழி சாலை பயனர்களுக்கு எவ்வளவு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்த வயதான ஆடவர் ஒருவர் கடுமையாக பெய்யும் மழையையும் பொருட்படுத்தாமல் அந்த குழியை மூடுவதற்காக மேற்கொண்ட நடவடிக்கையை காட்டும் காணொளி வைரலானத் தொடர்ந்து அவருக்கு பல இனங்களையும் சேர்ந்த மலேசியர்களிடமிருந்து பாராட்டுக்கள் குவிகின்றன.
ஒரு பிளாஸ்டிக் பை மூட்டையில் மணலை கொண்டுவந்து அதனை கொட்டி குழியை மூடும் அந்த மனிதாபிமான மனிதரின் செயலை Tik Tokக்கில் பதிவான காணொளி பார்வையாளர்களின் மனதை பெரிதும் கவர்ந்துள்ளது.
சாலையை தினந்தோறும் பலர் பயன்படுத்துன்றனர்.
சாலையில் ஏற்பட்ட பெரிய குழி மற்றவர்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படக்கூடாது என்ற நல்ல எண்ணத்தோடு அவரது செயல் இருப்பதாக பெண் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஒரு நிமிடம் 58 வினாடிகளைக் கொண்ட இந்த காணொளியை இதுவரை 140,000த்திற்கும் மேற்பட்டோர் கண்டுள்ளதோடு தன்னலம் கருதாமல் உதவும் அந்த ஆடவர் என்றும் நலத்தோடும் மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும் என பிரார்த்திப்பதாக பல நெட்டிசன்கள் பதிவிட்டுள்ளனர்.
அந்த மனிதரின் இந்த செயலைக் கண்டு சாலையை பரமாரிக்கும் மற்றும் அதனை கவனிக்க வேண்டிய ஊராட்சி மன்ற பணியாளர்கள் அலட்சியமாக இருப்பது குறித்து வெட்கப்பட வேண்டும் என மற்றொரு பயனர் பதிவிட்டுள்ளார்.