
பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 6 – நேற்று, பெட்டாலிங் ஜெயா கட்டுமான பகுதியிலுள்ள கட்டிடத்திலிருந்து கீழே விழுந்த வெளிநாட்டு தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
வாடகைக்கு எடுக்கப்பட்ட கடையின் புதுப்பித்தல் பணியின் போது விபத்து நிகழ்ந்தது என்றும் பாதிக்கப்பட்டவர் இணைப்புப் பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த துணை ஒப்பந்ததாரர் என்றும் முதல் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
உட்புற காயங்கள் காரணமாக பாதிக்கப்பட்டவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார் என்றும், விசாரணை முடியும் வரை கட்டுமான தளத்தில் உயரமான பகுதிகளில் வேலை செய்வதற்கு சிலாங்கூர் DOSH தடை விதித்துள்ளது.
தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் இவ்வழக்கு மேல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.