
தானா மேரா , டிச 1 – இன்று மதியம் குவால் ஈப்போவில் உள்ள
வீட்டில் தனது கணவரால் கத்தியால் குத்தப்பட்டதாக நம்பப்படும் பெண் ஒருவர் மரணம் அடைந்தார். இந்த சம்பவத்தில், 40 வயதான பாதிக்கப்பட்ட பெண் கடுமையாக காயத்திற்கு உள்ளானதைத் தொடர்ந்து சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே உயிரிழந்தார். மரணம் அடைந்த பெண்ணின் கணவரான 63 வயது நபர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டார்.
அப்பெண் கூர்மையான ஆயுதத்தால் குத்தப்பட்டதால் பலத்த காயங்களுக்கு உள்ளானதாக நம்பப்படுவதாக இச்சம்பவத்தை உறுதிப்படுத்திய தானா மேரா மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan முகமட் ஹாகி ஹஸ்புல்லா ( Mohd Haki Hasbullah ) தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.



