
ஜோர்ஜ் டவுன், அக் 24 –
கடந்த செவ்வாய்க்கிழமை, கம்போங் கெபுன் சிரேயில் கத்தியால் குத்தி ஆடவர் ஒருவருக்கு கடுமையாக காயம் விளைவித்ததாக தாய்லாந்து பிரஜை மீது செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட 63 வயதான ஃபிராம் பூமினுக்கு ( Phram Phumi ) மலாய் அல்லது ஆங்கிலம் புரியவில்லை, மேலும் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மொழிபெயர்க்க தாய்லாந்து மொழிபெயர்ப்பாளரின் உதவி தேவைப்பட்டதால் வாக்குமூலம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
இந்த குற்றச்சாட்டை மறுசெவிமடுப்பதற்கும் , மொழி பெயர்ப்பாளரை நியமிப்பதற்கும் நவம்பர் 7 ஆம் தேதியை நீதிபதி ஜூரைடா அபாஸ்
( Juraidah Abas ) நிர்ணயித்ததோடு குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு ஜாமின் வழங்க மறுத்துவிட்டார்.
முன்னதாக உள்நாட்டைச் சேர்ந்த 58 வயது நபர் மீது ஆயுதத்தை பயன்படுத்தி கடுமையாக காயம் விளைவித்த குற்றச்சாட்டை தாய்லாந்து ஆடவர் ஒப்புக்கொண்டார்.



