Latestமலேசியா

கத்தியால் மனைவியின் கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற குற்றச்சாட்டை ஆடவர் ஒப்புக் கொண்டார்.

குளுவாங், மார்ச் 12-தனது மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்ய முயன்றதாக இன்று குளுவாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆடவர் ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

நீதிபதி முஜிப் சரோஜி ( Mujib Saroji ) முன்னிலையில் மாண்டரின் மொழியில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது 56 வயதான எய் ஜீன் யீ ( Ei Jean Yee ) அதனை ஒப்புக் கொண்டார்.

மார்ச் 4ஆம் தேதி இரவு மணி 9.31 க்கு தாமான் முஹிபாவில் உள்ள ஒரு வீட்டில் அவர் தனது 48 வயது மனைவியின் தொண்டையை அறுத்து, கைகள் மற்றும் தோள்களில் வெட்டிக் கொல்ல முயன்றதாக குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது.

கூடியபட்சம் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் தண்டனைச் சட்டத்தின் 307 ஆவது பிரிவின் கீழ் அந்த ஆடவர் மீது மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

சம்பந்தப்பட்ட நபர் ஜோகூர் பாரு பெர்மாய் மருத்துவமனையில் மனநல மதிப்பீட்டை கோரியுள்ளதால் அவருக்கு ஜாமின் அனுமதிக்கக்கூடாது என அரசு தரப்பு துணை வழக்கறிஞர் நூர் ரமிசா ரசாலி ( Nur Ramizah Razali ) நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அவரது கோரிக்கையை நீதிபதி ஏற்றுக்கொண்டு இந்த குற்றச்சாட்டு மீண்டும் ஏப்ரல் 10ஆம்தேதி மறுவாசிப்புக்கு செவிமடுக்கப்படும் என தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!