Latestமலேசியா

கனரக வாகனங்கள் அவ்வப்போது புஸ்பாகோமின் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும – நியோஸ் கோரிக்கை

கோலாலம்பூர், டிச 26 – பாதுகாப்பற்ற கனரக வாகனங்கள் சாலையில் செல்வதைக் கண்காணிக்க அவற்றை PUSPAKOM எனப்படும் கணினிமயமாக்கப்பட்ட வாகன ஆய்வு மையத்தின் கடுமையான மேற்பார்வையின் கீழ் அவ்வப்போது சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

சாலைப் போக்குவரத்துத் துறையின் பாதுகாப்புத் தரங்களுக்கு இணங்கத் தவறும் கனரக வாகனங்கள் மீது கூடுதலான அபராதம் மற்றும் கடுமையான நடவடிக்கை மூலம் அமலாக்க முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டுமென தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனமான (NIOSH) துணைத் தலைவர் மணிவண்ணன் கோவின் (Manivanan Gowin) கேட்டுக்கொண்டார்.

பாதுகாப்பற்ற வாகனங்கள் சாலையில் செல்வதைத் தடுக்க விரிவான கண்காணிப்பு மிகவும் முக்கியமானது என்று இன்று வெளியிட்ட அறிக்கையொன்றில் அவர் வலியுறுத்தினார்.

வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 204 ஆவது கிலோமீட்டரில் ஏழு உயிரிழப்புகள் தொடர்பான பயங்கரமான விபத்து சோகம் குறித்து கருத்துரைத்தபோது மணிவண்ணன் இதனை தெரிவித்தார்.

கனரக போக்குவரத்தை நடத்துவோர் , குறிப்பாக டிரக் மற்றும் பேருந்து ஓட்டுனநளுக்கு மிகவும் விரிவான தொடர்ச்சியான பாதுகாப்பு பயிற்சி திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

இந்தப் பயிற்சியில் கவனமாக வாகனம் ஓட்டுதல், சாலைச் சட்டங்களைப் பற்றிய புரிதல் மற்றும் முழுமையான பாதுகாப்புக் கொள்கைகளைப் பயன்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் .

அதிக விழிப்புணர்வு மற்றும் ஒழுக்கம் இருந்தால் மட்டுமே, விபத்துகளை குறைக்க முடியும். மேலும் இயந்திர கோளாறுகளை நேரடியாக கண்டறிய அனைத்து கனரக வாகனங்களிலும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (Tyre Pressure Monitoring System ) (TPMS) மற்றும் டெலிமேடிக்ஸ் (telematik ) போன்ற அண்மைய தொழில்நுட்பத்தை கட்டாயமாக பயன்படுத்துவதும் பரிந்துரைக்கப்பட வேண்டும் என மணிவண்ணன் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!