
சென்னை, நவ 13- எதிர்பாராத திருப்பமாக, கமல்ஹாசனின் Raaj Kamal Films International தயாரிப்பில், ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 173 படத்திலிருந்து இயக்குனர் சுந்தர் சி விலகுவதாக அறிவித்துள்ளார்.
இந்தப் படம் தொடர்பாக பிரமாண்டமாக தகவல் வெளியான ஒரு வாரத்திற்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் இரண்டு பெரிய ஜாம்பவான்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவரும் 46 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்து செயல்படுவதால் இப்படம் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
எதிர்பாராத மற்றும் தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக, இந்த திட்டத்திலிருந்து வெளியேறுவதாக சுந்தர் C சமூக வலைத்தளத்தில் ஒரு அறிக்கை வாயிலாக இத்தகவலை வெளியிட்டிருந்தார்.
சுந்தர் Cயின் இந்த திடீர் முடிவினால் 2027 பொங்கல் வெளியீட்டுத் திட்டமான இந்த படத்திற்கு இப்போது எதிர்பாராத பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இந்த முடிவு பரஸ்பர இனக்கத்தோடு எடுக்கப்பட்டதோடு , சுந்தர் C மற்றும் தயாரிப்பு நிறுவனம் இருவரும் இணக்கமான முறையில் பிரிந்துள்ளனர்.
இந்த லட்சியத் திட்டத்தைக் கையகப்படுத்த ஒரு மாற்றுத் திட்டத்திற்கான நடவடிக்கையில் Raaj Kamal Films Internationalஇல் உள்ள தயாரிப்புக் குழு இப்போது ஈடுபடத் தொடங்கியுள்ளதாக அறியப்படுகிறது.



