
காஜாங், ஆகஸ்ட்-20 – சிலாங்கூர் காஜாங்கில் ஆபத்தான முறையில் மாணவர்களை ஏற்றி இறக்கி விட்டு வைரலான பள்ளி வேன் ஓட்டுநர் கைதாகியுள்ளார்.
நேற்று மாலை, சாலையில் போய்க்கொண்டே ஒரு மாணவரை இறக்கி விட்டும் இன்னொருவரை ஏற்றிக் கொண்டும் அந்த வெள்ளை நிற வேன் சென்றது.
நிற்காத வேனிலிருந்து மாணவர் இறங்குகிறார், இன்னொரு மாணவர் வேனுடனேயே சென்று அதில் ஏறுகிறார்.
கரணம் தப்பினால் மரணம் என்பது போல அதனைப் பார்ப்பதற்கே நெஞ்சு பதறுகிறது.
இந்நிலையில் விசாரணையில் இறங்கிய போலீஸ் 59 வயது வேன் ஓட்டுநரைக் கைதுச் செய்தது.
சம்பவம் குறித்து தகவல் தெரிந்தோர் அருகிலுள்ள போலீஸ் நிலையங்களைத் தொடர்புக் கொள்ளலாம்.