
ஜோர்ஜ் டவுன் , ஏப் 24 – 10 ஆண்டுக்கும் மேலாக மலேசியாவின் சுனாமி எச்சரிகை அபாயங்கள் முதல் முறையான பெரிய அளவில் மேம்படுத்தப்பட்டு வருகின்றது. Met Malaysia எனப்படும மலேசிய வானிலைத்துறையின் முயற்சியாக நாடு முழுவதிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நில நடுக்கம் மற்றும் சுனாமி பேரழிவுகளின் அபாயத்தைக் குறைப்பதற்கான இந்த திட்டத்தின் கீழ் நிலநடுக்கம் மற்றும் சுனாமி பேரிடர் ஏற்படும் வேளையில் பாதிக்கப்படக்கூடிய கடலோர சமூகங்களைப் பாதுகாக்கும் கடப்பாட்டையும் இந்திட்டம் கொண்டுள்ளது.
கடந்த சில நாட்களாக பினாங்கில் புதிய அபாய ஒலியை பலர் கேட்டிருக்கலாம் . இந்த முயற்சி பினாங்கு மாநிலத்தில் மட்டும் இல்லை. கெடாவில் உள்ள கோலா மூடாவின் மீன்பிடி கிராமங்கள் முதல் திரெங்கானு , சபா மற்றும் சரவாக் வரையில் ஒன்பது மாநிலங்களில் கடற்கரையோரப் பகுதிகளில் 23 சுனாமி சைரன்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. சுனாமி அபாய ஒலியை மேம்படுத்தும் திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த திட்டம் முழுமையடையும் என மெட் மலேசியாவின் தலைமை இயக்குநர் டாக்டர் முகமட் ஹிஷாம் முகமட் அனிப்
( Mohd Hisham Mohd Anip ) தெரிவித்தார்.