Latestமலேசியா

கழிவுநீர் தொட்டியில் வேலை செய்த போது நச்சு வாயு பரவியது; ஈப்போவில் 3 தொழிலாளர்கள் பலி

ஈப்போ, ஏப்ரல்-7- பேராக், ஈப்போவில் உல்லாசத்தலமொன்றின் கட்டுமானத் தளத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது, மூன்று தொழிலாளர்கள் மரணமடைந்தனர்.

நச்சு வாயுவை சுவாசித்ததால் அவர்கள் மரணமடைந்ததாக நம்பப்படுகிறது. கழிவுநீர் தொட்டியில் சிக்கிக் கொண்ட எழுவரில் அவர்களும் அடங்குவர் என, பேராக் தீயணைப்பு – மீட்புத் துறை கூறியது.

மீட்புக் குழுவினர் சம்பவ இடம் விரைந்த போது, 5 தொழிலாளர்களை பொது மக்கள் காப்பாற்றி வெளியே இழுத்திருந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக உடனடியாக அருகிலுள்ள கிளினிக் கொண்டுச் செல்லப்பட்டனர்.

இருவர் உள்ளேயே சிக்கிக் கொண்டு அங்கேயே மரணமுற்றனர்; மற்றொருவரான இந்தோனேசிய ஆடவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

உயிரை பலி வாங்கிய அந்தக் கழிவு நீர் தொட்டி 5 மீட்டர் ஆழம், 4 மீட்டர் அகலம், 2.4 மீட்டர் உயரம் கொண்டதாகும். சடலங்களை வெளியில் எடுக்கும் முன் தீயணைப்பு வீரர்கள் சுவாசக் கருவிகளை அணிந்தே உள்ளே இறங்கினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!