
கோலாலம்பூர், பிப் 18 – சிலாங்கூர் காஜாங்கிலுள்ள அடுக்ககத்தில் தனது 60 வயது கணவனை கத்தியில் குத்தி கொலை செய்த 59 வயது பெண் கைது செய்யப்பட்டார்.
நேற்று காலை மணி 11.05 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் உடலின் பல பாகங்களில் கத்திக் குத்துக்கு உள்ளான அந்த ஆடவர் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே மரணம் அடைந்தததாக காஜாங் போலீஸ் தலைவர் நஸ்ரோன் அப்துல் யூசோப் ( Naazron Abdul Yusof) தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட பெண் மலேசியர் என்பதோடு 37 ஆண்டு காலம் தனது கணவரோடு வாழ்ந்து வந்ததோடு அவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடே இச்சம்பவத்திற்கு காரணம் என தெரிகிறது.
விசாரணைக்கு உதவும் பொருட்டு பிப்ரவரி 21 ஆம்தேதிவரை அப்பெண் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.