
காஜாங், மார்ச் 6-காஜாங்கில் ஒரு உணவகத்திற்கு அருகில் வீட்டிற்கான பல்பொருள் கடை ஒன்று இன்று விடியற்காலையில் ஏற்பட்ட தீ விபத்தில் அழிந்தது.
அதிகாலை மணி 4.41 அளவில் இந்த சம்பவம் தொடர்பாக அவசர அழைப்பு கிடைத்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கை பிரிவின் உதவி இயக்குநர் அகமட் க்லிஸ் முக்தார் தெரிவித்தார்.
காஜாங், பாங்கி மற்றும் செமினி ஆகிய தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 19 தீயணைப்பு வீரர்கள் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்து சென்று தீயைணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.



