
காஜாங் , அக் 3 – கடந்த மாதம் காஜாங் Hentian வளாகத்தில் உள்ள தொழுகை இடம் மற்றும் உணவகத்தில் ஒரு பெண்ணைத் தொந்தரவு செய்ததாகக்கூறி மாற்றுத்திறனாளி நபரை தனிப்பட்ட கும்பல் தாக்கியதால் அவர் காயமடைந்தார்.
செப்டம்பர் 10 ஆம் தேதி இந்த சம்பவம் நடந்ததாக தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டதோடு, அந்த ஆடவர் பொது இடத்தில் தாக்கப்படுவதைக் காட்டும் 51 வினாடியைக் கொண்ட வீடியோ பதிவு வைரலானதாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் நஸ்ரோன் அப்துல் யூசோப் (Naazron Abdul Yusof) தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட உள்ளூர் ஆடவரான 31 வயது நபர் முகம் மற்றும் வாயில் காயம் அடைந்ததைத் தொடர்ந்து காஜாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
அவர் மனநிலைக் குறைபாடு காரணமாக 20 நாட்கள் மனநல wardடிலும் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக இன்று வெளியிட்ட அறிகைகையில் நஸ்ரோன் குறிப்பிட்டார்.
இதனிடையே இச்சம்பவம் தொடர்பில் அக்டோபர் 2 ஆம் தேதி நான்கு உள்நாட்டு ஆடவர்களையும் ஒரு இந்தோனேசிய நபரையும் போலீசார் கைது செய்தனர்.
குற்றவியல் சட்டத்தின் 323 மற்றும் 506ஆவது பிரிவுகளின் கீழ் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.