ஜாகார்த்தா, செப்டம்பர்-3, பகடிவதை, வயது கட்டுப்பாடின்றி எந்த எல்லைக்கும் போகும் என்பதற்கு உதாரணமாய் அண்டை நாடான இந்தோனீசியாவில் அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
அதுவும் ஆரம்ப பள்ளியில் அது நிகழ்ந்திருப்பது நெட்டிசன்களை சினமாக்கியுள்ளது.
காயா (kaya) பூசப்பட்ட ரொட்டியை சாப்பிடுமாறு மாணவி ஒருவர் பள்ளி நண்பர்களால் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார்.
ஆனால், அந்த ரொட்டியினுள் காயாவுக்கு நடுவே சிறு சிறு பிளாஸ்டிக் குச்சிகளையும் வைத்து அவர்கள் கொடுத்திருக்கின்றனர்.
அவற்றைப் பார்ப்பதற்கு, பல் குத்த நாம் பயன்படுத்தும் குச்சிகளை (tootpicks) போலிருக்கிறது.
அம்மாணவியின் துரதிஷ்டம், பல் குத்தும் குச்சியொன்று அவளது தொண்டையில் கிடைமாட்டமாக (horizontally) சிக்கிக் கொண்டது.
கிட்டத்தட்ட உள்நாக்கில் குத்தும் அளவுக்குப் போய் விட்டது.
சொல்ல முடியாத வலியால் துடிதுடித்த மாணவியை, தாதியர்கள் ஒருவழியாகத் தேற்றி ஒருவழியாக குச்சியை வெளியே எடுத்தனர்.
குச்சி வெளியே எடுக்கப்படும் வீடியோ வைரலாகி, நெட்டிசன்கள் மத்தியில் தாதியர்களுக்குப் பாராட்டும், பகடிவதையில் ஈடுபட்ட மாணவர் கும்பலுக்கு கண்டனமும் கிடைத்து வருகிறது.