
ஷா ஆலம், அக்டோபர் 7 –
கடந்த ஞாயிற்றுக்கிழமை செர்டாங் பகுதியில் போலீஸ் நடத்திய ரகசிய பரிசோதனை நடவடிக்கையில், காரின் பின்பகுதியை (boot) மாற்றியமைத்து அதில் போதைப்பொருளை மறைத்து வைக்கும் புதிய தந்திரத்தை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த நடவடிக்கையில், காரின் பின்பகுதியை access card எனப்படுகின்ற ரகசிய அணுகல் அட்டையின் மூலம் மட்டுமே திறக்கப்பட முடியுமென்று தகவல் அம்பலமானது.
இந்தச் சோதனையில், 39 வயதுடைய உள்ளூர் நபர் ஒருவர் மெர்சிடிஸ் காரை ஓட்டிக்கொண்டிருந்தபோது போலீசால் கைது செய்யப்பட்டார் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷசெலி கஹார் (Datuk Shazeli Kahar) தெரிவித்தார்.
மறைத்து வைக்கப்பட்ட 5.4 மில்லியன் மதிப்பிலான 63.7 கிலோ கிராம் எடையுள்ள ஷாபு (syabu) மற்றும் 20.1 கிலோ கிராம் எடையுள்ள எக்ஸ்டஸி மாத்திரைகள் (ecstasy pills) போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட ஆடவனுக்கு முன்னதாக இரண்டு போதைப்பொருள் குற்றச்செயல் பதிவுகள் உள்ளன என்றும் சிறுநீர் பரிசோதனையில் அவன் போதைப்பொருள் உட்கொண்டதும் கண்டறியப்பட்டது.
கைது செய்யப்பட்ட நபர் 7 நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின் கீழ் பதிவு இவ்வழக்கு பத்தி செய்யப்பட்டுள்ளது