Latestமலேசியா

கார் ஆற்றில் விழுந்தது 84 வயது ஓட்டுநர் மரணம்

ஜெம்போல் , மார்ச் ,10-ஜெம்போல் Pekan Batu Kikir ரில் 84 வயது மூதாட்டி ஓட்டிச் சென்ற கார் ஆற்றில் விழுந்ததில் அவர் உயிரிழந்தார்.

இந்த பரிதாபமான சம்பவம் இன்று காலை மணி 10.45 அளவில் நிகழ்ந்ததாக ஜெம்போல் மாவட்ட போலீஸ் தலைவைர் சூப்பரிண்டன்ட் நோர்ஹிசாம் முஸ்தபார் தெரிவித்தார். கடையில் பொருட்களை வாங்கியபின் தனது புரோடுவா மைவி காரில் அந்த மூதாட்டி வீட்டிற்கு சென்றகொண்டிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்தது.

ஒரு வளைவை கடந்த பின் அந்த மூதாட்டி ஓட்டிச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் விழுந்தது. தலையில் ஏற்பட்ட கடுமையாக காயத்தினால் விபத்து நிகழ்ந்த இடத்திலேயே அவர் இறந்தார்.

1987ஆம் ஆண்டின் சாலை போக்குவரத்து சட்டத்தின் 41ஆவது பிரிவு (1) இன் கீழ் இவ்விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் நோர்ஹிசாம் குறிப்பிட்டார்.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!