Latestமலேசியா

காலாவதியான சாலை வரி, காப்பீடு கொண்ட 10 சொகுசு வாகனங்கள் நெகிரி செம்பிலானில் பறிமுதல்

சிரம்பான் – ஆகஸ்ட்-8 – வைத்திருப்பது ஆடம்பரக் கார்கள்; வாழ்வது பகட்டு வாழ்க்கை; ஆனால் சாலை வரியும் வாகனக் காப்பீட்டையும் மட்டும் முறையாகக் கட்ட முடியாது.

நெகிரி செம்பிலான் சாலைப் போக்குவரத்துத் துறை நடத்திய அதிரடிச் சோதனையில் அம்பலமான வாகனமோட்டிகளின் செயல்களே அவை.

LKM வாகன உரிமம் காலாவதியாகி ஆண்டுக்கணக்கில் ஆனதும் கண்டறியப்பட்டது; கேட்டால் மறந்து விட்டோம் என சர்வசாதாரணமாக பதில் வருவதாக, நெகிரி செம்பிலான் JPJ இயக்குநர் Hanif Yasabra Yusuf கூறினார்.

இது போன்ற சாக்குபோக்குகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார் அவர்.’ இவ்வாண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை அத்தகைய 10 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன.

அவற்றில் பெரும்பாலானவை, Porsche Taycan, Mini Cooper Countryman, Toyota Aplhard, Tesla போன்ற contitental சொகுசுக் கார்களாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!