
பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 22 -20 வயது இளைஞர் ஒருவர் காவல்துறையினரால் துன்புறுத்தப்பட்டதாகக் கூறியதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட போலீசிக்கு எதிராக ஒழுக்க மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வழக்கறிஞர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.
நவம்பர் 15ஆம் தேதியன்று, கொள்ளை வழக்கில் ஈடுபட்டிருப்பதாக கூறி போலீசார் அந்த இளைஞரை பந்திங்கிலுள்ள அவரது தாத்தா வீட்டில் கைது செய்துள்ளனர்.
பின்பு போலீசார் அவரை திருட்டு குற்றத்தை ஒப்புக்கொள்ள வற்புறுத்தியதாகவும் அந்த ஆடவர் கூறியுள்ளார்.
மருத்துவ அறிக்கையில், சம்பந்தப்பட்ட நபரின் உடலில் காயங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால் காவல்துறை இது தவறான அடையாளம் காரணமாக ஏற்பட்ட சம்பவம் என கூறி குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.



