ரானாவ், ஆகஸ்ட் -30 – சபா, குண்டாசாங்கில் உள்ள கினாபாலு மலை உச்சியிலிருந்து இறங்கும் போது, உள்ளூரைச் சேர்ந்த 54 வயது பெண் மலையேறி உயிரிழந்தார்.
மலையிறங்கும் போது அதிகப்படியான குளிரால் உடல் நடுங்கியும், பலவீனமாகவும் அவர் இருந்துள்ளார்.
இதனால், மீட்புப் குழுவிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு முதலுதவி வழங்கப்பட்டது.
எனினும் அப்போதும் அவர் சுயநினைவற்ற நிலையிலேயே இருந்தார்.
கடைசியில் மலையடிவாரம் கொண்டு வரப்பட்டு, சுகாதார அமைச்சின் மருத்துவக் குழு பரிசோதித்ததில், அவர் உயிரிழந்து விட்டது உறுதிச் செய்யப்பட்டது.
இதையடுத்து அவரின் உடல் மேல் நடவடிக்கைக்காக போலீசிடம் ஒப்படைக்கப்பட்டது.