
பாச்சோக், நவம்பர்-16, குரங்கை துன்புறுத்தியதாகக் கூறப்படும் ஒரு நபரையும், சம்பவம் வைரலாவதற்கு முன்பு அதை வீடியோவில் பதிவுச் செய்த அவரது நண்பரையும் கிளந்தான் போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.
வீடியோவில், ஒரு நபர் குரங்கை அதன் கழுத்தில் கட்டப்பட்ட மெல்லிய கயிற்றால் இழுத்து, கீழே தள்ளிப் பிடிக்கிறார்.
பின்னர் குரங்கை அவர் பலமுறை அறைவதும் அடிப்பதுமாக உள்ள நிலையில், அது தப்பி ஓட போராடுகிறது.
வைரலான வீடியோ பொது மக்களிடமிருந்து கடும் எதிர்ப்பைப் பெற்றதை அடுத்து, 24 மற்றும் 28 வயதுடைய இருவரும் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் கைதாகினர்.
விசாரணைக்காக சந்தேக நபர்கள் செவ்வாய்க்கிழமை வரை காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பாச்சோக் போலீஸ் கூறியது.
விலங்குகளை துன்புறுத்தியதற்காக 1953-ஆம் ஆண்டு விலங்குகள் சட்டம் மற்றும் இணைய வசதிகளை தவறான முறையில் பயன்படுத்தியதற்காக 1998-ஆம் ஆண்டு தொடர்பு – பல்லூடகச் சட்டத்தின் கீழும் இச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது.



