Latest
கிளந்தான் குவா மூசாங்கில் சாலை விபத்து; மூவர் பலி

குவா மூசாங், ஜனவரி 13 – இன்று, கிளந்தான் குவா மூசாங் – குவாலா க்ராய் சாலையில் அமைந்துள்ள, Kampung Paloh அருகே நடந்த விபத்தில், மூன்று ஆண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட அவ்விபத்தில் மேலும் மூவர் காயமடைந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
தகவல் கிடைத்தவுடனேயே சுமார் 40 நிமிடங்களுக்குள் வந்தடைந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக மீட்பு பணி வேளைகளில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்றும் அறியப்படுகின்றது.



