
கோலா கிரெய், ஆகஸ்ட் 15 – நேற்று, கிளந்தான், கோலா கெராயில் கம்போங் கெர்தாக் கங்கோங்கில் (Kampung Gertak Kangkong), மலைப்பாம்பு கூட்டிலிருந்து 67 குட்டிகள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் , 60 பாம்புகள் வெற்றிகரமாக பிடிக்கப்பட்டன.
எஞ்சிய 7 காட்டிற்குள் தப்பியுள்ளது. அப்பகுதியில், கால்நடைகளை எடுத்துச் செல்ல வந்த விவசாயி, 7.3 மீட்டர் நீளமும் 200 கிலோ எடையும் கொண்ட ஒரு மலைப்பாம்பைக் கண்டுள்ளார்.
முட்டைகளைச் சேகரிக்கும் வேளையில் அவை அனைத்தும் குஞ்சு பொரித்தன என்றும் இதில் 7 குட்டிகள் அருகிலுள்ள புதர்களுக்குள் தப்பிச் சென்றன என்றும் அறியப்படுகின்றது.
பிடிக்கப்பட்ட அனைத்து மலைப்பாம்பு குட்டிகளும் தீயணைப்பு மீட்பு நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு பின்னர் காட்டில் உள்ள இயற்கை வாழ்விடங்களில் விடப்படும் என்று தீயணைப்புத்துறை செயல்பாட்டு தலைவர் முகமட் ஹம்தான் மகாதி கூறியுள்ளார்.