
அமெரிக்கா, ஜூலை 14 – கடந்த ஞாயிற்றுக்கிழமை, அமெரிக்காவில் நடைபெற்ற கிளப் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் செல்சியா அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் பாரிஸ் செயிண்ட் ஜெர்மைனை (PSG) வீழ்த்தி வெற்றி வாகை சூடியுள்ளனர்.
32 அணிகள் களமிறங்கிய இந்த போட்டியின் இறுதி சுற்றில் செல்சியா அணியின் பிரபல காற்பந்து வீரர் பாமெர் (Palmer), அந்த 3 கோல்களையும் அடித்து புதிய முத்திரை பதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றி பெற்ற அணியினருக்கு 125 மில்லியன் பரிசுத் தொகையையும், இரண்டாம் நிலை வெற்றியாளர்களுக்கு நிதி வெகுமதிகளும் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆறு வாரங்களில் இரண்டாவது முறையாக PSG அணியினர் காற்பந்து இறுதிப் போட்டிகளில் ஈடுபட்டிருந்தாலும், கிளப் உலக கோப்பையில் அதன் வெற்றியைத் தக்க வைத்து கொள்ள இயலவில்லை.