
கோலாலம்பூர்,பிப்ரவரி-27 – Kelana Jaya வழித்தடத்திற்கான எல்.ஆர்.டி சேவையில் இன்று மீண்டும் தொழிற்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.
இதனால் ஒரு வாரத்தில் கிளானா ஜெயா வழிதடத்திற்கான எல்.ஆர்.சேவையில் இரண்டாவது முறையாக சேவைகள் துண்டிக்கப்பட்டன. தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக கிளானா ஜெயா எல் .ஆர். டி நிலையத்தில் ஒரு ரயில் சேவையிலிருந்து இன்று நிறுத்தப்பட்டதாக Rapid KL தனது முகநூலில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த சூழ்நிலை LRT ரயில் சேவைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதோடு சேவைக்கான அட்டவணை இயல்பாகவே சரிசெய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்திற்காக Rapid KL நிறுவனம் தனது வருத்தத்தையும் தெரிவித்துக் கொண்டது. திங்கட்கிழமை, Kelana Jaya வழித்தட சேவையில் அவசர பிரேக் மற்றும் ரயில் கட்டுப்பாட்டு சாதன அமைப்புகளில் தொடர்ச்சியான தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டதால் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.



