
கிள்ளான், அக்டோபர்-14,
தீபாவளி மற்றும் சிலாங்கூருக்கு வருகைப் புரியும் ஆண்டை முன்னிட்டு கிள்ளான், தெங்கு கிளானாவில் அலங்கார வாயில் திறக்கப்பட்டுள்ளது.
MBDK எனப்படும் கிள்ளான் அரச மாநகர மன்றத்தின் ஏற்பாட்டில் இந்த தீபாவளி வாயில் அல்லது pintu gerbang திறப்பு விழா, நேற்று அக்டோபர் 13-ஆம் தேதி இரவு ஜாலான் தெங்குக் கிளானாவில் நடைபெற்றது.
கிள்ளான் மேயர் Dato Haji Abd. Hamid Hussain அதனைத் திறந்து வைத்தார்.
அவருடன் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ. கணபதிராவ், மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வீ. பாப்பாராயுடு, செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ், மற்றும் பண்டாமாரான் உறுப்பினர் Tony Leong Tuck Chee உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த வாயில் இந்துக் சமூகத்தின் தீபாவளி ‘ஷாப்பிங் சொர்கம்’ என அழைக்கப்படும் ஜாலான் தெங்கு கிளானாவை மேலும் அழகாக்கியுள்ளது.
இந்த தீபாவளி வாயிலை நிறுவ நிதியுதவி செய்த யுகராஜா, தங்கராஜா, ராய் ஞானேஸ்வரன், அருள்நேசன், குமணன் ஆகியோர் சிறப்பு செய்யப்பட்டனர்.
ஜாலான் தெங்கு கிளானாவின் புதிய அடையாளமான இந்த தீபாவளி வாயில், ஏராளமான வருகையாளர்களைக் கவர்ந்திழுக்கும் என்பதோடு, இனி விற்பனை பெருவிழாக்களின் முக்கிய இடமாகவும் விளங்குமென, மேயர் உள்ளிட்ட பிரமுகர்கள் வணக்கம் மலேசியாவிடம் கூறினர்.
திறப்பு விழாவுக்குப் பிறகு, பிரமுகர்களுடன் நகர மேயர் walk-about மேற்கொண்டு வணிகர்கள், வருகையாளர்களுடன் அளவளாவியதோடு, விழாக் கொண்டாட்டத்தையும் நேரில் கண்டு இரசித்தார்