
வதோதரா, ஜூலை-10 – மேற்கிந்திய மாநிலமான குஜராத்தில் பாலம் இடிந்ததில், வாகனங்கள் ஆற்றில் விழுந்து குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
புகழ்பெற்ற வதோதரா – அனந்த் நகரங்களை இணைக்கும் ஆற்றின் கம்பீரா பாலமே இடித்து விழுந்தது.
40 ஆண்டுகள் பழைமை வாய்ந்த அப்பாலத்தின் நடுப்பகுதி திடீரென சரிந்ததில், டிரக் லாரிகளும் கார்களும் ஆற்றில் விழுந்தன.
10 பேர் வரையில் அதில் காப்பாற்றப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பாலத்தின் உடைந்த பகுதிக்கு அருகே லாரி ஒன்று தொங்கிக் கொண்டிருப்பதும், ஆற்றில் சில வாகனங்கள் விழுந்துள்ளதும் வைரலான புகைப்படங்களில் காண முடிகிறது.