
கோலாலம்பூர், அக் -29,
அம்பாங், ஜாலான் மெர்டேகாவில் மதுபோதையில் இருந்த ஆடவன் ஒருவன் அங்குள்ள கோவிலில் குழப்பத்தை ஏற்படுத்தியதோடு துரோகச் செயலில் ஈடுபட்டதன் தொடர்பில் கைது செய்யப்பட்டான். அந்த கோவில் பகுதியில் பாதுகாப்பை கண்காணித்து வந்த ரேலா உறுப்பினர் ஒருவர் வழிபாட்டுத் தலத்தின் வளாகத்தில் உள்ள உணவகத்தில் சலசலப்பைக் கேட்டபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக அம்பாங் ஜெயா போலீஸ் தலைவர் முகமட் அஷாம் இஸ்மாயில் ( Mohd Azam Ismail ) தெரிவித்தார்.
கோவில் பகுதியில் சத்தம் போட வேண்டாம் என்பதோடு அங்கிருந்து வெளியேறுமாறு ரேலா உறுப்பினர் கேட்டுக் கொண்டபோது அந்த நபர் ஊதுபத்தி எரிக்கப்பட்ட இடத்தை தள்ளிவிட்டார். இதனால் அதன் சாம்பல் கீழே கொட்டியது. பின்னர் புகார்தாரர் அந்த நபரை தடுத்து நிறுத்தி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து . சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு வந்த அம்பாங் ஜெயா போலீஸ் அதிகாரிகள் நேற்று காலை மணி 9.20 அளவில் அந்த நபரை கைது செய்தனர். 35 வயதுடைய அந்த நபர் இதற்கு முன் போதைப் பொருள் தொடர்பான எட்டு குற்றப் பின்னணிகளை கொண்டிருப்பதும் போலீஸ் விசாரணையின்போது தெரியவந்துள்ளது



