
கோலாலம்பூர், ஜூலை 10 – நாட்டில் சட்டவிரோத குடியேறிகளை குடிநுழைவுத்துறைத் தடுப்பு மையங்களில் (PATI) வைப்பதற்கு 10 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படுமென்றும் அதற்கு மேற்பட்டு அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்றும் குடிநுழைவுத்துறைத் திட்டவட்டமாக கூறியுள்ளது.
தற்போது மலேசியாவில் இருக்கும் தடுப்பு மையங்களில் சட்டவிரோத குடியேறிகளின் எண்ணிக்கை போதுமானதாக இருப்பதை உறுதி செய்வதற்கு குடிநுழைவுத்துறை KPI அமலாக்க முறையை செயல்படுத்தி வருகின்றதென்று இயக்குநர் ஜெனரல் டத்தோ ஜகாரியா ஷாபான் விளக்கமளித்துள்ளார்.
இன்று வரை தடுப்பு மையங்களிலுள்ள 80 சதவீத சட்டவிரோத குடியேறிகள் வெற்றிகரமாக நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்றும், சுமார் 20 முதல் 30 சதவீதம் வரை மட்டுமே தங்குவதற்கு இடங்கள் காலியாக உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அனுமதி இல்லாமல் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திய குற்றத்திற்காக முதலாளிகளுக்கு 800,000 ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.