
ஆம்ஸ்டர்டாம், செப்டம்பர்-17 – கொசுக் கடி சர்வ சாதாரணமானது என்றாலும், சிலரை மட்டும் கொசுக்கள் கடித்து வாட்டுவது ஏன் என நெதர்லாந்து நாட்டுவிஞ்ஞானிகள் ஒரு பகுதி காரணத்தை கண்டுபிடித்துள்ளனர்.
தலைநகர் ஆம்ஸ்டர்டாமுக்கு (Amsterdam) அருகே நடைபெற்ற Lowlands இசை விழாவில், 465 பேர் “கொசு காந்தம்” (mosquito magnet) சோதனையில் பங்கேற்றனர்.
அதில் மதுபானம் குடித்தவர்களையும், முந்தைய இரவு உடலுறவு கொண்டவர்களையும் கொசுக்கள் அதிகம் ‘விரும்பி’ கடித்தது தெரிய வந்தது.
ஆனால் sunscreen சருமப் பாதுகாப்பு கிரீம்களைப் போடாதவர்களையும், காலையில் குளிக்காதவர்களையும் கொசுக்கள் குறைவாகக் கடித்தன.
கொசுக்கள் கவரப்படுவதற்கு வெறும் மூச்சில் வரும் _carbon dioxide எனப்படும் கரியமில வாயு காரணமல்ல; மாறாக, உடல் வாசனை, சூடு, காட்சி போன்ற சிக்கலான சைகைகளையும் அவைத் தேடிச் செல்வதாக விஞ்ஞானிகள் கூறுகின்றன.
இதை நன்கு புரிந்துகொள்வதன் மூலம் மலேரியா, டெங்கு போன்ற நோய்களைத் தடுக்க புதிய வழிகள் கிடைக்கலாம். என்றும் அவர்கள் நம்புகின்றனர்.
ஆனால் இப்போது நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் – மதுபானம் குடித்து, ‘பார்ட்டி’ முடித்தவர்களால் கொசுக்களுக்கு விருந்து தான் என்பதாகும்.