
கோலாலம்பூர், அக் 3 – Batu Arang, Taman Kundang jaya Kundang கில் PVC குழாய் தயாரிக்கும் தொழிற்சாலை தீ விபத்தில் அழிந்தது.
இந்த சம்பவம் குறித்து நேற்றிரவு மணி 10.41 அளவில் தங்களது தரப்புக்கு அவசர அழைப்பு கிடைத்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் நடவடிக்கை பிரிவுக்கான துண இயக்குநர் அகமட் முக்லிஸ் மொக்தார் ( Ahmad Mukhlis Mokhtar ) தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து ரவாங், பெஸ்தாரி ஜெயா, செலயாங் மற்றும் ஷா ஆலாம் ஆகிய இடங்களைச் சேர்ந்த தீயணப்பு மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த தீ விபத்தில் அந்த தொழிற்சாலை 80 விழுக்காடு அழிந்தபோதிலும் அங்கு எவரும் உயிர்ச்சேதம் மற்றும் காயத்திற்கு உள்ளாகவில்லை.
இரவு மணி 11.30 மணியளவில் தீ கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்த இந்த நடவடிக்கையில் 9 தீயணைப்பு வண்டிகளைச் சேர்ந்த 36 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் நடவடிக்கையில் முழுமூச்சுடன் ஈடுபட்டனர்.