
கோலா சிலாங்கூர், அக் 3 – கடந்த ஐந்து ஆண்டுகளாக TR குற்றக் கும்பலில் தொடர்பு கொண்டிருந்ததாக நால்வர் மீது செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
27, 35, 44 மற்றும் 45 வயதுடைய அந்த நான்கு இந்திய ஆடவர்கள் மீது நீதிபதி Nurul Mardhiah Mohammed Redza முன்னிலையில் குற்றஞ்சாட்டப்பட்டது.
அவர்கள் அனைவரும் குற்றச்சாட்டை புரிந்துகொண்டதற்கு அடையாளமாக தங்களது தலையை அசைத்தனர்.
உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட 2012 ஆம் ஆண்டின் சோஸ்மா சட்டத்தின் பாதுகாப்பு குற்றங்கள் சிறப்பு நடவடிக்கையின் கீழ் அவர்களுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்ட போதிலும் அவர்களிடம் வாக்குமூலம் எதுவும் பதிவு செய்யப்படவில்ல.
2019 ஆம் ஆண்டு நவம்பர் முதல் கடந்த ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதிவரை Jeram , Jalan Bagan Sungai Janggutடில் உள்ள ஒரு உணவகத்தில் TR கும்பலைச் சேர்ந்தவர்களாக இருந்ததாக அவர்களுக்கு எதிரான குற்றப்பத்திரிக்கைல்யில் கூறப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஐந்து முதல் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 130V (1) இன் கீழ் அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது .
இந்த வழக்கை மீண்டும் மறுவாசிப்பிற்கு செவிமடுப்பதற்கான தேதியை உயர்நீதிமன்றம் நிர்ணயிக்கும் என நீதிபதி நூருல் தெரிவித்தார்.