கோலாலம்பூர், செப்டம்பர் -17, சிறார் இல்ல துன்புறுத்தல் சர்ச்சையில் சிக்கியுள்ள குளோபல் இக்வான் நிறுவனம் மீதான விசாரணைத் தொடர்பில், 581,000 ரிங்கிட் மதிப்பிலான அதன் 96 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
4 வங்கிக் கணக்குகள் ஒரேடியாக மூடப்பட்ட வேளை 8 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
போலீஸ் படையின் சட்ட விரோத பணப்பரிமாற்ற தடுப்புப் பிரிவின் விசாரணக்கு வழி விடும் வகையில் அவ்வாறு செய்யப்பட்டிருப்பதாக, தேசியப் போலீஸ் படைத் தலைவர் (IGP) Tan Sri Razarudin Husain தெரிவித்தார்.
இன்று காலை நடத்திய சிறப்புச் செய்தியாளர் சந்திப்பில் அவர் அவ்விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.
ஓரினப் புணர்ச்சி, கொடுமை உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலானில் குளோபால் இக்வான் நடத்தி வரும் 20 சிறார் இல்லங்களிலிருந்து 402 சிறார்கள் மீட்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.