
கேபேங், குவாந்தான், செப்டம்பர் 2 – கடந்த ஞாயிற்றுக்கிழமை, குவாந்தான் கேபேங் படாங் ஹங்குசில் (Padang Hangus, Gebeng) நடைபெற்ற “War Game” நடவடிக்கையின் போது சுமார் 41 பேர் கைது செய்யப்பட்டனர்.
சம்பவத்தின் போது 100,000 ரிங்கிட்டுக்கும் அதிக மதிப்பிலான போலி துப்பாக்கிகள் மற்றும் துணை உபகரணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்களில், 21 முதல் 66 வயதுடைய ஆண்களும் அவர்களில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள், பொறியாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள், ‘fisioterapi’, ஆசிரியர்கள் மற்றும் தொழிற்சாலை ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில் பின்னணியைச் சேர்ந்தவர்கள் உள்ளடங்குவர் என்று குவாந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் அஷாரி அபு சமா கூறினார்.
மேலும் செல்லுபடியாகும் உரிமம் அல்லது அனுமதி இன்றி போலி துப்பாக்கிகளை வைத்திருந்ததற்காக, அவர்கள் அனைவரும் ஆயுதச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் வருகின்ற வியாழக்கிழமை வரை தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.