
ரொம்பின், மார்ச்-24-பஹாங், குவாலா ரொம்பின் Kampung Jemeri-யில் 60 ஹெக்டர் செம்பனைத் தோட்டம் நேற்று தீப்பற்றி எரிந்தது.
பிற்பகல் 2 மணிக்கு மேல் ஏற்பட்ட இந்த தீ விபத்தை அடுத்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடம் விரைந்தனர்.
தோட்டத் தொழிலாளர்களின் உதவியுடன் தீயை கட்டுப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.
நேற்று மாலை வரை 40 விழுக்காடு பகுதியில் தீ அணைக்கப்பட்டது; எஞ்சிய பகுதிகளில் இன்று காலை மீண்டும் தீயணைக்கும் பணிகள் தொடரும்.
இதுவரை உயிர் சேதம் எதுவும் பதிவாகவில்லை.
தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வெப்பம் மற்றும் வறட்சியான இக்காலக்கட்டத்தில் இத்தகைய தீ விபத்துகள் ஏற்படும் அபாயம் அதிகம் இருப்பதால், பொது மக்கள் மற்றும் தோட்ட நிர்வாகிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



